• Sun. Oct 12th, 2025

சவூ­தியின் உத­வி­யுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்ட கட்­டடம் இன்று திறப்பு

Byadmin

Oct 24, 2017

இலங்கை அர­சி­னதும்  சவூதி அரே­பியா அபி­வி­ருத்தி நிதி­யத்­தி­னதும் நிதி­யு­த­வியில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இலங்கை தேசிய  மருத்­து­வ­ம­னையில் “வலிப்பு நோய் சிகிச்சை நிலையம்” 8 மாடி­களைக் கொண்­டது.  சவூதி அரே­பியாவின்  3963 மில்­லியன் ரூபா நிதியுதவியுடனும் இலங்கை அரசு 645 மில்­லியன் ரூபா செலவிலும் இப்பிரிவு நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ளது.

இந் நிலையம் இன்று பிற்பகல் 04.00 மணிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனா, சுகா­தார அமை­ச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரத்ன, சவூதி அரே­பியா துாதுவர் மற்றும் வருகை தந்­துள்ள சவூதி அரசின் பிர­திநி­திகள் பங்கு பற்­று­த­லோடு திறந்து வைக்­கப்­ப­டு­கின்­றது.
உலகில் வாழும் மக்­களில்  50 மில்­லியன் பேர் வலிப்பு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என உலக சுகா­தார அமைச்சின் அறிக்­கையில் தெரி­விக்க­ப்பட்­டுள்­ளது. அந்த  வகையில் இலங்­கையில் 2 இலட்­சத்து 50 ஆயிரம் வலிப்புநோயாளிகள் உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது கொழும்பு தேசிய மருத்­து­வ­ம­னையில் வாராந்தம் 20 பேர் இந் நோயினால் பாதிக்­கப்­பட்டு பதி­யப்­ப­டு­கின்­றனர் என டாக்டர் சுனேத்­திரா சேன­நா­யக்க தெரி­வித்தார்.

இலங்­கையில் இது­போன்ற நவீன வைத்­தி­ய­சாலை இது­வரை இருந்­த­தில்லை. இதுவே முதற்­த­ட­வை­யாக நவீன இயந்­தி­ரங்­களுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

-vv

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *