• Sat. Oct 11th, 2025

பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் இதயநோய்

Byadmin

Sep 27, 2025

பிறக்கும் பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இதயநோய் என்பது நம்மை எச்சரிக்கும் அபாய ஒலி. குழந்தைகளின் இதயத்தைத் தாக்கும் இந்த நோய்க்கு அடிப்படை பல்மோனரி ஸ்டினோசிஸ் (Pulmonary Stenosis) என்கிற நிலை.

பல்மோனரி ஸ்டீனோசிஸ் என்பது நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பு. இந்த அடைப்பு, பத்து சதவிகிதம் இதய பாதிப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்த அடைப்பு பெரிதாக இருக்காது; மெல்லிய அளவிலேயே இருக்கும். இந்த அடைப்பின் அளவைப் பொறுத்துதான் இதயத்தில் பாதிப்பின் தீவிரம் இருக்கும்.

அறிகுறிகள்…

சீரற்ற இதயத் துடிப்பு
சீரற்ற ரத்த ஓட்டம்
மூச்சுத்திணறல்
பாதம், முகம், கண் இரப்பைகள், வயிறு போன்ற பகுதிகளில் வீக்கம்.

சிகிச்சைகள்!

* இதயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை, அளவைப் பொறுத்து சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும். இதயத்துக்குச் செல்லும் வழியிலுள்ள ரத்தக்குழாய் அடைப்பை சரிசெய்ய ஸ்டென்ட் (Stent) சிகிச்சை முறை பின்பற்றப்படும்.

* வால்வுகளில் அடைப்பு, ரத்தக் குழாயில் அடைப்பின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் இதய அறுவைசிகிச்சை (Open Heart Surgery) மேற்கொள்ளப்படும்.

* ரத்தக்குழாய் அடைப்பின் பாதிப்பைப் பொறுத்து சிகிச்சைக்கான நேரமும், செலவுத் தொகையும் மாறுபடும்.

பல்மோனரி ஸ்டினோசிஸ் ஏற்படுவதற்குக் காரணங்கள்…

பல்மோனரி ஸ்டினோசிஸ் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுவதற்குக் காரணம், பெற்றோர்களின் வாழ்வியல் முறையே.

* பெற்றோர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம், வாழ்வியல் மாற்றம் போன்றவையே பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

* சில சமயங்களில் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் பெற்றோர்களிடமிருந்து குழந்தைக்கு ஏற்படும் ஜீன் மாற்றம் காரணமாக இருக்கலாம்.

* கருவில் குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாடு.

போன்ற பல்வேறு காரணங்களால் இந்த இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *