• Mon. Oct 13th, 2025

தாயின் ஜனாஸா 3 நாட்களின் பின்னர் நல்லடக்கம்

Byadmin

Apr 9, 2025

மகன் தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா மூன்று நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை(08)  நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் வசித்து வந்த 71 வயதுடைய தாய் ஒருவரே அவரது 42 வயது மகனின் தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை (6) மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த தாயும் அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் அனாதரவான நிலையில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ள நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயதான தாயுடன் மகன் முரண்பட்டுக் கொண்டு தாக்கிய போது தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடம் தொடர்பில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மரணமடைந்த தாயின் உடல் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் ஜனாஸாவை ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கல்குடா அனர்த்த அவசர சேவை அமைப்பினர் பொறுப்பேற்று  ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் மஃரிப் தொழுகையின் பின்னர் செவ்வாய்க்கிழமை (08) நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *