ஏதாவது பிரச்சினையாக இருந்தால் அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை நிதி அமைச்சின் பணிகளை தொடருமாறும் தனது பணியில் தலையிட வேண்டாம் என்றும் நாடாளுமன்றில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும குழு விவகாரம் தொடர்பான தகவல்களை முன்வைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதன்போது, மேலும் கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, “எங்களை குற்றம் சாட்டாதீர்கள், தவிசாளராக நான் அந்தப் பணியை முறையாகச் செய்து வருகிறேன்.
பிரச்சினை ஏதும் இருந்தால் அனைவரும் ஒன்றிணைந்து என்னைத் தவிசாளர் பதவியிலிருந்து வெளியேற்றுங்கள்” என்றார்.