• Sat. Apr 4th, 2026

உயர் நீதிமன்ற முன்னிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

Byadmin

Oct 25, 2017

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று(25) நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, உயர் நீதிமன்றம் கடந்த 12ஆம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களின் அடிப்படையில் குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாட்டின் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பான்மையானவர்கள் மோசடிக்காரர்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி தெரிவித்திருந்த நிலையில், குறித்த இந்த கருத்து தொடர்பில் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் சுனந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற வான் படை அதிகாரி சுனில் பெராரா ஆகியோர் உயர் நீதிமன்றில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீதி கட்டமைப்புகளை உருவாக்கும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிடுவது, சட்டம் தொடர்பில் பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமையும் என அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதியமைச்சர் இன்று(25) நீதிமன்றில் முன்னிலையாகி, அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *