பஸ் வண்டிகளுக்கான முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமான முறையில் முடிவடைந்துள்ளதாக செயற்றிட்டத்தின் ஆலோசகர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.
மருதானை, பொரள்ளை பஸ் வண்டிகளுக்கான முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்துடன் முதலாவது கட்டம் முடிவடைந்ததுள்ளது.
இந்த வருடத்திற்கான பஸ் வீதி ஒழுங்கு வேலைத்திட்டம் முடிவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கென 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டடுள்ளதுடன் பொரள்ளை – மருதானை, மருதானை – பொரள்ளை வீதி ஒழுங்கை மேற்கொள்வதற்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் அடுத்த ஆண்டில் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் இதற்கென 160 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.