• Sat. Oct 11th, 2025

வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

Byadmin

Apr 20, 2025

நாளை (21) மத்திய மாகாணம் மற்றும் கேகாலை, பதுளை பிரதேசங்களில்வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை 39 முதல் 45 செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.எனவே மக்கள் கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடித்தல் மற்றும் இயன்றளவு நிழல் பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *