ஏழரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற இலங்கை விமானப் பயணி ஒருவர், சனிக்கிழமை (17)அன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் கண்டியின் கம்பளை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.
அவர் சிகரெட்டுகளை டுபாயிலிருந்து வாங்கி, பஹ்ரைனுக்கு சென்று, அங்கிருந்து சனிக்கிழமை (17) அன்று காலை 09.30 மணிக்கு கல்ஃப் ஏர் விமானம் GF-144 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
50,000 வெளிநாட்டுத் உற்பத்தி “பிளாட்டினம் டபுள் மிக்ஸ்” சிகரெட்டுகள் அடங்கிய 250 சிகரெட் அட்டைப் பெட்டிகள் எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து, இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.