பதுளை நகர மையத்தில் , அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டியதில் உடம்பு முழுவதும் பல வெட்டு காயங்களுடன் குறித்த நபர் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த வரை காப்பாற்ற முயன்ற போது அனைவருக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் சந்தேகநபரான அண்ணன் கத்திக் கொண்டிருந்ததால், அனைவரும் இவர்களை நெருங்க பயந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் பதுளை பொலிஸ் வாகன சாரதி மற்றும் சார்ஜென்ட் என்று கூறிக்கொண்ட ஒரு இளைஞன் அங்கு வந்து சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..