ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அயான் அகாஸ் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தெரிவித்தார்.
இவர், நடைபெற்று முடிந்த மாகாண மட்ட விஞ்ஞான ஒலிம்பிக் போட்டியில் இடைநிலைப் பிரிவில் பங்குபற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர், எம்.எச்.எம்.பாஹிர், எம்.எச்.றிஸானா ஆசிரியை ஆகியோரின் புதல்வராவார்.
தனது திறமையை வெளிப்படுத்தி தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவனுக்கும், வழிப்படுத்திய ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் பாடசாலை அதிபர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.