• Sat. Oct 11th, 2025

யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்

Byadmin

May 28, 2025

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் இன்றைய தினம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் சகிதம் பார்வையிட்டார்.

மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை அமைச்சரின் கவனத்திற்கு அரசாங்க அதிபர் கொண்டுவந்தார்.  

இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அரசாங்க அதிபரிடம் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *