புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.