இன்று (ஜூன் 3) ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இதன் மூலம், ஆர்சிபி அணியின் 18 வருட கனவு நிறைவேறியுள்ளது. தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது ஆர்சிபி. ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும்.