• Mon. Oct 13th, 2025

நாளை முதல் இலவச ரயில் சேவைகள்

Byadmin

Jun 8, 2025

பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளதாகவும், இவை அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தின் முழு நிதி ஆதரவுடன் இயக்கப்படுவதால், இந்த அனைத்து ரயில் பயணங்களும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். 

இந்த விசேட ரயில் சேவைகள் நாளை (09) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இயக்கப்படவுள்ளதாகவும், இதனுடன் இணைந்து தங்குமிட வசதிகள் மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துவதற்கும் ரயில்வே திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதன்படி, அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்காக பல இடங்களில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வசதிகளை ரயில் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *