• Mon. Oct 13th, 2025

மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்

Byadmin

Jun 11, 2025

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (11) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. 

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவநிலையின் தாக்கம் காரணமாக,காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும்.

இந்த கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பயணம் செய்ய வேண்டாம் என கடற்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த அ றிவிப்புகளை கவனமாக பின்பற்றுமாறு மீனவ மற்றும் கடற்சார் சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *