• Mon. Oct 13th, 2025

250 கோடி பேருக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்படும்

Byadmin

Jun 13, 2025

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர் காது கேளாமை பிரச்சனைக்கு ஆளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

உலகளவில் அமைதியாக அச்சுறுத்தும் உடல்நல பாத்திப்புகளுள் ஒன்றாக காது கேளாமை (DEAFNESS AND HEARING LOSS  ) பிரச்சனை உருவெடுத்துள்ளது.

தற்போதைய நிலவரப்படிஇ உலகளவில் 160 கோடி நபர் காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் 10 பேரில் ஒருவருக்கு காது கேட்கும் திறனில் பிரச்சனை இருப்பதாகவும் WHO வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாமல் என்றால்?

காது கேட்கும் திறன் இழப்பு என்பது ஒலியின் வீரியத்தை அளவிடும் அலகான டெசிபல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இயல்பாக கேட்கும் திறன் இரண்டு காதுகளிலும் 20 டெசிபல் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். நான்கு முதல் ஐந்து பேர் கூடி இருக்கும் இடத்தில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு பிறர் பேசுவது நன்றாக கேட்கும் நிலை இருந்தால் அந்த நபர் காது கேட்கும் திறனை இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடப்படும். அவர் பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப லேசானது முதல் கடுமையானது வரை காது கேட்கும் திறனின் குறைபாடு அளவிடப்படும்.

ஒரே நாளில் செவித்திறன் இழப்பு ஏற்படுவதில்லை. காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும். ஆனால்இ இதனை கூர்ந்து கவனிப்பது கடினமான விஷயமாக இருக்கலாம். இப்படியிருக்கஇ காது கேளாமையின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

• அமைதியான சூழலில் கூட பிறர் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல்

• அருகில் இருந்தே ஒருவர் பேசினாலும்  அவர் சொன்ன வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கேட்பது

• வார்த்தையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவது.

இது போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால்இ அதனை சாதரணமாக கடந்து செல்லாமல் உகந்த சிகிச்சை அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட 60மூ காது கேளாமல் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்கிறது ஆய்வு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *