கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, காய்ச்சல், சளி, இருமல் உள்ள பிள்ளைகளை பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிக்கப்பட் சிறுவர்கள் ஓடி குதித்து விளையாடினால் , அவர்களுக்கு இதய பாதிப்பு (மாரடைப்பு) ஏற்படக்கூடும். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு இருக்கும் போது நீங்கள் கடினமாக உழைத்தால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம், உங்கள் உயிரை கூட இழக்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய சிறுவர்களுக்கு அரிசி கஞ்சி, உப்பு கஞ்சி, வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.