• Sat. Oct 11th, 2025

பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவுக்கான பாட்டி வைத்திய முறைகள்!

Byadmin

Sep 28, 2025

ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான் இரத்தக்கசிவு நோய். இது பெரும்பாலும் வாய் ஆரோக்கியத்தை ஒழுங்காக பராமரிக்காமல் இருப்பதனாலேயே வருவதாகக் கூறப்படுகிறது. ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை எளிதான கை மருத்துவ முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

ஈறுகளின் இரத்தக்கசிவை தவிர்க்க மற்றும் நிவர்த்தி செய்ய ஏராளமான கை வைத்தியங்கள் உள்ளன. இவற்றை ஒழுங்கான முறையில் மேற்கொள்வதன் மூலம், இவற்றின் பயன்கள் முழுவதும் கிடைக்கும்.

வைட்டமின் சி குறைபாடு, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களுள் ஒன்றாகும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அதிக அளவிலான வைட்டமின் சி சத்தை வழங்கி, ஈறுகளின் இரத்தக்கசிவை தடுப்பதற்கு உதவக் கூடியவையாகும்.


பால், கால்சியம் சத்தின் தலைசிறந்த மூலாதாரமாகும். ஆகவே ஈறுகளை வலுப்படுத்த வேண்டுமெனில், உடலில் கால்சியம் சத்தை மீண்டும் மீண்டும் நிரப்ப வேண்டியது முக்கியம். எனவே ஈறுகளில் இரத்தக்கசிவை தவிர்க்க தினமும் தவறாமல் பால் அருந்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.


பச்சைக் காய்கறிகளை நன்கு மென்று திண்பதன் மூலம் பற்கள் தூய்மையடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்படும். ஆகையால், தினமும் ஒரு பச்சைக் காய்கறியை மென்று தின்னும் பழக்கத்தை மேற்கொள்வது நலம்.


அருகம்புல் சாற்றினை அருந்துவதன் மூலம் ஈறுகளின் இரத்தக்கசிவிலிருந்து நிவாரணம் பெறலாம். க்ரான்பெர்ரி சாறு அதன் ஆன்டிபாக்டீரியல் தன்மைகளை முடுக்கி விட்டு, ஈறுகளின் மேல் படிந்திருக்கக்கூடிய பாக்டீரியாக்களை துடைத்து, இரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கிறது.


பேக்கிங் சோடா வாயில் இருக்கக் கூடிய மைக்ரோஎன்விரான்மெண்டை அமிலத்தன்மை கொண்டதாக மாற்றி பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அதற்கு பேக்கிங் சோடாவை விரல்களில் தொட்டு, ஈறுகளில் தேய்த்துக் கொள்ளலாம்.

கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மெல்லலாம் அல்லது கிராம்பு எண்ணெயை ஈறுகளின் மேல் தேய்த்துக் கொள்ளலாம். இது, பற்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய பழமையான மற்றும் எளிமையானதொரு கை வைத்தியமாகும்


பல் துலக்கும் போது, வாயை புத்துணர்ச்சியோடும், தூய்மையாகவும் வைத்திருக்கக்கூடிய புதினா எண்ணெயை உபயோகிக்கலாம்.

பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொப்பளித்து வரலாம். இது ஈறுகளில் ஏற்படக்கூடிய இரத்தக்கசிவுக்கான மிகச் சிறந்த கை வைத்தியமாகும்.


பல் துலக்கிய பின் விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கும். இது ஈறுகளை வலுவாக்கி இரத்திக்கசிவிலிருந்து அவற்றை பாதுகாக்கும்.


கொழுப்புச்சத்து மிகுந்த, காரசாரமிக்க, கனமான உணவுப் பதார்த்தங்கள் பல் இடுக்குகளில் படிந்து, நுண்ணுயிர்களுக்கு உணவு வழங்கி ஈறுகளில் இரத்தத்தை கசியச் செய்து, ஜிஞ்சிவிட்டிஸ் (gingivitis) வரை கொண்டு செல்லும். எனவே இது போன்ற கொழுப்புச்சத்து மிக்க உணவுப் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்த்தல் நலம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *