• Sat. Apr 4th, 2026

இன்று காற்றுடன் கூடிய மழை

Byadmin

Jul 22, 2025

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி,  மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். 

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். 
 
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட-மத்திய, வடமேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சுமார் 55-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *