நமது ஊரில் சீதன கொடுமையால் நிறைய பெண்கள் பாதிக்க பட்டவண்ணம் உள்ளனர் ஒருசில ஆண்களும் பாதிக்க பட்டவண்ணம் உள்ளனர் இதுக்கு முற்று புள்ளி வைக்க வேணும் என்றால் முதலில் பள்ளி நிர்வாகம் உலமாக்களும் முன்வரவேண்டும்??
01 தீர்மானம் சீதனம் வாங்கி திருமணம் செய்து கொள்வோரின் திருமண நிக்கஹ் பள்ளியில் வைத்து நடை பெற மாட்டாது என்று பகிரங்கமாக ஒவ்வரு பள்ளியிலும் விளம்பர பலகை ஒன்று வைக்க வேண்டும்??
02 தீர்மானம் சீதனம் பற்றிய எந்த தகவலும் பள்ளிவாசல் கொப்பியில் எழுத படமாட்டாது
03 தீர்மானம் நிக்கஹ் செய்து கொடுக்க போகும் உலமாக்கள் சீதன திருமணத்துக்கு போக கூடாது
04 தீர்மானம் சீதனம் பற்றிய பிரச்சனைகளை விசாரிப்பதட்கு பள்ளி நிர்வாகம் சமூகமளிக்க கூடாது
என்று ஒரு சில தீர்மானத்தை ஜமியத்துலமா கொண்டு வருவதட்கு இந்த உலமாசபைக்கு மஜ்லிஸ் சூரா சபைக்கும் எத்துணை கோடி ரூபாய் சிலவு வரும் என்பதையும் நீங்கள் சிந்தித்து செயல் படவேண்டி பணிவாக கேட்டு கொள்கின்றோம்
சீதனத்தை நம்பி 18=19=20=21 வயது வாலிபர்கள் திருமணம் முடிக்கும் சம்பவத்தை காண்கிறோம் தொழிலும் தெரியாது குடும்பம் நடத்த வக்கில்லை சீதனத்தை வாங்கி திண்டு முடிந்த கையோடு பொண்டாடி வெளிநாடு அனுப்புது ஒரு
கூட்டம்
சீதனத்தை ஒலித்தால் ஆண்கள் சம்பாதிக்கும் விகிதம் கூடும் தொழில் படிக்க ஆர்வம் காட்டுவார்கள் படிக்க ஆர்வம் காட்டுவார்கள் வீடு கட்டவேண்டும் என்ற எண்ணம் வரும் அப்பதான் ஒவ்வரு ஆணுக்கும் பொறுப்பு உண்டாகும்
இதை விட்டு பெண்களே வீடு காணி காசி நகை வாகனம் வீட்டு தளபாடங்கள் என்று கொடுக்கும் பொது ஆண்களின் வேலை என்ன புல்லை கொடுக்கும் வேலை மட்டும்தான் சாப்பாடும் ஓசி சாப்பாடு இது எந்த வர்க்கம் எந்த இனம் சிந்திக்க தோண்டவில்லையா உலமாக்களே??
நீங்கள் சீதனம் என்ற ஹராத்துக்கு ஆதரவு கொடுத்தால் சாராயம் விற்க கஞ்சா விக்க சூது விளையாட விபசாரம் செய்ய நீங்கள் தடை செய்ய கூடாது சீதனம் ஹலால் என்றால் மற்ற விடயங்களும் ஹலால்தான்