கொழும்பு மற்றும் பதுளை இடையேயான எல்ல ஒடிஸி ரயிலில், சுற்றுலாப் பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடாமல் ஆசன முன்பதிவு செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு, வெற்று ஆசனங்களுடன் ரயில் பயணித்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.
இதனால், நானுஓயாவிலிருந்து எல்ல நோக்கிச் செல்லும் பயணிகள் (11) கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.