இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சமீபத்தில் புதிய சிம் வாங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் முந்தைய தொலைபேசி இலக்கம் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் காணப்பட்டதால், அவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய தொலைபேசி இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் சிம் அட்டையை வாங்கிய சில நாட்களில், குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு விராட் கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஆகிய வீரர்களிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ரஜத் படிதாரிடமிருந்து அழைப்பு வந்த நிலையில் அவர் “நான் ரஜத் படிதார் பேசுகிறேன். இந்த சிம் அட்டை எண் என்னுடையது. என்னிடம் திரும்ப கொடுத்து விடுங்கள்” என கூறியுள்ளார்.
இதனையடுத்து சில மணி நேரங்களில் குறித்த இளைஞரின் இல்லத்திற்கு காவல்துறையினர் வருகைத்தந்தனர். பின்னர் உண்மையை அறிந்த அந்த இளைஞர் குறித்த சிம் அட்டையை திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.