• Sat. Oct 11th, 2025

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பத்ருதீன் தயாப்ஜி, சுரையா தயாப்ஜி

Byadmin

Aug 14, 2025

இந்திய தேசம் தனது 78வது விடுதலை நாள் தினத்தை 15ம் தேதி கொண்டாட உள்ளது. தேசியத்தின், தேச ஸ்நேகத்தின், தேச பக்தியின் அடையாளமாக தேசிய பதாகை மூவர்ணத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பட்டொளி வீசி பறக்க போகிறது.

இந்த மகத்தான நேரத்தில் தேசம் காக்க தன்னலம் கருதாது களத்தில் நின்ற போராளிகளில் நினைவு கூறப்பட வேண்டிய தம்பதியர் இவர்கள்.

பத்ருதீன் தயாப்ஜி, சுரையா தயாப்ஜி வடிவமைத்த அசோக சக்கரத்துடன் கூடிய மூவர்ண கொடி 22 ஜுலை 1947 ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் பார்வையிட்டு நமது நாட்டின் தேசிய கொடியாக அங்கீகரிக்கப்பட்டதாக பிரபலமான வரலாற்று ஆய்வாளர் Trevor Royl தனது “The Lost Days of The Raj” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சிவில் சர்வீஸ் துறையில் பணியாற்றிய பத்ருதீன் தயாப்ஜி சுதந்திரத்திற்கு பின்னர் பிரஸ்ஸில்ல் நாட்டின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார்.. பின்னர் டோக்கியோ இந்திய தூதரகத்தில் பணியாற்றி இந்தியா திரும்பியவர். 1962-65 வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *