கடந்தாண்டு வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை நிலச்சரிவில் ஐநூறுக்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து பலியானதும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்த பேரழிவு ஏற்பட்டது. கேரள மாநில அரசு “வயநாடு புனர் நிர்மாணம்” பணிகளை துவங்கியுள்ளது.
லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசுப் அலி தனது பங்களிப்பாக பத்து கோடி ரூபாய்க்கான செக் கேரள முதல்வர் பிணராய் விஜயனை இன்று (20) நேரில் சந்தித்து வழங்கினார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் முதல் கட்டமாக யூசுப் அலி அவர்கள் ஐந்து கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.