கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (03) மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) காலை 22,000 புள்ளிகளை கடந்ததுள்ளது.
இன்று காலை சுமார் 09.35 மணியளவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இந்த தனித்துவமான மைல்கல்லை எட்டியது.
அந்த நேரத்தில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 22,017.56 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.