• Sun. May 24th, 2026

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை…

Byadmin

Oct 31, 2017

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை…

நாட்டின் பல பாகங்களில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும்(31) எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 50 – 60Km வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 2m அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் சாரதிகள் மேலும் கோரப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *