• Sat. Nov 1st, 2025

பந்து தாக்கிய வீரர் உயிரிழப்பு

Byadmin

Oct 31, 2025

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் பயிற்சியொன்றின்போது பந்து தாக்கிய 17 வயதான பென் அஸ்டின் உயிரிழந்துள்ளார்.

தலைக்கவசத்துடன் அஸ்டின் இருந்தபோதும் கழுத்துப் பகுதிக்கான கவசத்தை வலைப்பயிற்சியின்போது செவ்வாய்க்கிழமை (28) அவர் அணிந்திருக்கவில்லை. அந்நேரத்திலேயே பந்தை வீசும் சாதனத்தால் எறியப்பட்ட பந்தானது அவரது கழுத்தை தாக்கியுள்ளது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அஸ்டின், வியாழக்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பந்து தாக்கி உயிரிழந்த அவுஸ்திரேலியாவின் பில் ஹுயூஸுக்கும் இதே பகுதியிலேயே கழுத்தில் பந்து தாக்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *