இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகியன வெளியேற்றப்பட்டுள்ளன.
தமது மைதானத்தில் வியாழக்கிழமை (30) நடைபெற்ற கிறிஸ்டல் பலஸுடனான விலகல் முறையிலான இத்தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து லிவர்பூல் வெளியேறியது.
பலஸ் சார்பாக இஸ்மைலா சார் இரண்டு கோல்களையும், யெரெமி பினோ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை நியூகாசில் யுனைட்டெட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது. நியூகாசில் சார்பாக பேபியன் ஸ்கார், நிக் வொல்டெமடே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில் தமது மைதானத்தில் நடைபெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஆர்சனல் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
