கிழக்கு மாகாண, கல்முனை கல்வி வலயத்தில் முதன்முதலாக பாடசாலை றக்பி அணி சாஹிரா தேசிய பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஸாஹிரா ரக்பி அணியின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் றக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப்பின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
இந்த சாஹிரா றக்பி அணியினருக்கு மூன்று மாதங்களுக்கு மேலாக றக்பி அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். றஜீப், தேசிய போட்டிகளில் விளையாடிய வீரரும், பயிற்றுவிப்பாளர் பயிற்சிகளை பெற்றவருமான றக்பி பயிற்றுவிப்பாளர் ஏ.பி.எம். இல்ஹாம் ஆகியோர் தொடர் பயிற்சிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.