• Sat. Apr 4th, 2026

இத்தாலிய சுப்பர் கிண்ணம்: சம்பியனானது நாப்போலி

Byadmin

Dec 23, 2025

இத்தாலிய சுப்பர் கிண்ணத் தொடரில் நாப்போலி சம்பியனானது.சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பொலொக்னாவுடனான இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே நாப்போலி சம்பியனானது.நாப்போலி சார்பாக டேவிட் நெரேஸ், றஸ்முஸ் ஹொஜ்லுன்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.தனது அரையிறுதிப் போட்டியில் இத்தாலிய கிண்ணத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற ஏ.சி மிலனை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நடப்பு சீரி ஏ சம்பியன்களான நாப்போலியும், மற்றைய அரையிறுதிப் போட்டியில் சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற இன்டர் மிலனை பெனால்டியில் 3-2 என்ற ரீதியில் வென்று இத்தாலிய கிண்ண சம்பியன்களான பொலொக்னாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *