• Sat. Apr 4th, 2026

3 நாட்களில் 3ஆவது முறையாக நிலநடுக்கம்

Byadmin

Jan 6, 2026

ஆப்கானிஸ்தான், காபூல் நகரில் இன்று புதன்கிழமை (07) காலை 11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்நிலநடுக்கம் 100 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளன.

கடந்த 3 நாட்களில் 3ஆவது முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.

கடந்த 3ஆம் திகதி இரவு 11 மணியளவில் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி இருந்தது. அது 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதேபோன்று, அதே நாளில் அதே பகுதியில் மாலை 6.33 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 6.3 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக அதில் சிக்கி 27 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *