இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தய நாகரீகத்துடன் ஓர் ஒப்பீடு (தொடர் 2)
இஸ்லாமிய நாகரீகம் மேற்கத்தேய நாகரீகத்துடன் ஓர் ஒப்பீடு (தொடர் 2) முதல் தொடரில் இஸ்லாமிய நாகரீகமும் மேற்கத்தேய நாகரீகத்தினதும் பொதுவான ஒரு அறிமுகத்தை குறிப்பிட்டுள்ளேன். இப்போது நாகரீகங்களுக்கிடையிலான தனித்தன்மை மற்றும் அடிப்படைவாதங்களை நோக்குவோம். 1-இஸ்லாமிய நாகரீகம் ஆன்மீகம் மற்றும் லௌகீக ரீதியில் கரிசனை செலுத்துகின்றது. இஸ்லாத்தில் ஆன்மீக ரீதியில் மனிதனுக்கான வழிகாட்டலுள்ளது போல் லௌகீக செயற்பாடுகளிலும் வழிகாட்டலுள்ளது (வியாபாரம், அண்டை வீட்டாருடன் எப்படி நடப்பது, அரசியல், ஏனைய மதத்தினருடன் எப்படி நடப்பது). இதுவே மேற்கத்தேய நாகரீகத்தை எடுத்துக்கொண்டால் வெறுமனே லௌகீக ஆசாபாசங்களை மாத்திரமே அடிப்படையாக அமைத்திருக்கும். மதசார்பின்மை (அல்மானியா) முக்கிய கொள்கையே “மார்க்கத்தை உலகவிடயங்களை விட்டும் பிரித்தல் அல்லது தனிப்படுத்துதல்.” அவர்களின் பார்வையில் மார்க்கம் என்பது வணக்க வழிபாடுகள் மாத்திரமே, லௌகீக அல்லது உலக செயற்பாடுகளை மார்க்கம் வழிநடத்த முடியாது. 2- இஸ்லாமிய நாகரீகம் ஒருவனை புத்திரீதியாக, உடல்ரீதியாக, நடத்தைரீதியாக வடிவமைக்கிறது. புத்திரீதியான செயற்பாடுகளை பார்த்தால் (மார்க்க கல்வி, உலக கல்வி, சமகால கல்வி என) ஒருவன் வாழும் சமூகத்தில் எதையெல்லாம் கற்றல் அவசியமோ அவைகளை கற்பதும், கற்பிப்பதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. “நீங்கள் அறியாதவைகளை அறிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” (நஹ்ல்:43) உடல்ரீதியான செயற்பாடுகளை பார்த்தால் (சுத்தம், சாப்பாடு, கடமையான, சுன்னதான குளிப்புகள்,தொழுகைக்கு உழூ செய்தல், ஆடைகள், ஹலாலான சாப்பாட்டை உன்னுதல் என) மனிதனின் உடல் சார்ந்த அனைத்து பகுதியையும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. “ அல்லாஹ் உங்களுக்கு அளித்த ஹலாலான நல்லவைகளை உண்ணுங்கள், இன்னும் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருந்தால் அவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்” (நஹ்ல்:114) “நிச்சயமாக அல்லாஹ் பாவ மன்னிப்பு கேட்போரையும், சுத்தாமாக இருப்போரையும் விரும்புகிறான்” (பகறா:222) நடத்தைரீதியான செயற்பாடுகளை பார்த்தால் (பிறரை பார்த்து புன்னகைத்தல், உன்மை பேசுதல், அமைதியாக நடத்தல்) ஒருவனின் இயல்பு எவ்வாறு அமைந்திருக்க வேண்டுமென்பதை கவனிக்கலாம். பெருமையுடன் நடக்காமலிருத்தல் “உன் முகத்தை மனிதர்களை விட்டுத்திருப்பிக்கொள்ளாதே, பூமியில் பெருமையடித்துக்கொண்டு நடக்காதே” (லுக்மான்:18) பேசும் போது உண்மையையே பேசுதல் “நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களை கூறுங்கள்” (அஹ்ஸாப்:70) இது போன்று ஒரு முஸ்லிமின் அனைத்து பகுதியையும் இஸ்லாமிய நாகரீகம் கவனித்துள்ளது. ஆனால் மேற்கத்தேய நாகரீகம் வெறுமனே லௌகீக ரீதியான செயற்பாடுகளில் மாத்திரம் தங்கி பெரும்பாலான அனாச்சாரங்களை உருவாக்குகிறது. அவர்களின் ஆடைகளை, நடத்தைகளை, கல்விகளை கவனித்தால் உலக வாழ்வில் தான் ஏனோ தானோ என்று வாழ்ந்துவிட்டு போகலாம், தான் நல்லாயிருப்பதற்கு எதை செய்தாலும் தப்பில்லை என்று நிலமை மாறியுள்ளது. இன்ஷா அல்லாஹ் தொடரும்.
தமிழில்: அஷ்ஷெய்க் தாரிக் நிஸார் (அஸ்ஹரி) (MA reading)