மருந்து வகைகளின் விலைக்குறைப்பு நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றி
இலங்கை அரசாங்கம், 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலையை குறைத்தமை நோயாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகுமென்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள 2016 ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 48 வகையான மருந்து வகைகளின் விலை குறைக்கப்பட்டமை மற்றும் சீனிப் பாவனையை குறைப்பதற்காக வர்ண குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டமை ஆகியவற்றுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏனைய நாடுகளும் மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் கேட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமை தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவற்கான அடிப்படையாகும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிலைபேறான அபிவிருத்தி இலக்கை வெற்றி கொள்வதற்காக இலங்கைக்கான பயணத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படுமென்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.