விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – காமினி செனரத்
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத், உயர்நீதிமன்றத்திற்கு இன்று(06) தெரியப்படுத்தியுள்ளார்.
தன்னைக் கைது செய்வதை தவிர்க்குமாறு உத்தரவிடக் கோரி, காமினி செனரத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போதே, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி,மேற்குறித்த இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினார்.
மேலும், தேவையான வாக்குமூலத்தை வழங்க எதிர்வரும் 9ம் திகதி காமினி செனரத் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக உள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் அடுத்த கட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் 17ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.