ப்ளூவேல் விபரீதம் – உடலில் மின்சாரம் பாய்ச்சி இளைஞர் தற்கொலை…!!
ப்ளூவேல் விளையாடிய இளைஞர் ஒருவர், திடீரென தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல், பங்கேற்பாளருக்கு பல்வேறு சவால்களை அளிக்கும். நாளொரு சவால் வீதம் 50 நாட்களுக்கு கொடுக்கப்படும் சவால்களை பங்கேற்பாளர்கள் முடிக்க வேண்டும்.
தொடக்கத்தில் அளிக்கப்படும் சவால்கள் எளிதாகவே இருக்கும். ஆனால், போகப்போக சவால்கள் கடினமாக்கப்படும் மாஷ்மெல்லோ எனும் இனிப்பு பண்டத்தை வாய்நிறைய எடுத்துக் கொள்வது தொடங்கி, நடு இரவில் எழுந்து ஹாரர் திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் வீட்டின் மேற்கூரை மேல் நடப்பது என பயணித்து இறுதியில் கூரை மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இறுதி சவாலாக விடுக்கப்படும் என்கிறார்கள்.
மேலும், கைகளில் ரத்தத்தால் ப்ளூவேல் எனப்படும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து கொள்வது உள்ளிட்ட சவால்களும் இந்த விளையாட்டில் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உலக அளவில் இளைஞர்களின் வாழ்வுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக ப்ளூவேல் எனும் ஆன்லைன் விளையாட்டு மாறிவருகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ், தனலட்சுமி தம்பதி. இவர்களுக்கு மோகன்ராஜ் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மோகன்ராஜ், டிப்ளமோ முடித்து வீட்டில் இருந்தார். இந்நிலையில், தொழில் செய்வதுக்காக தன் தாயாரிடம் ரூ.5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு மகளின் திருமணத்தை முடித்த பின் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் மோகன்ராஜ் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, திங்கள்கிழமை காலை 11:00 மணி அளவில் வீட்டை உள்பக்கமாக பூட்டிய மோகன்ராஜ், கை, கழுத்து, தலைப்பகுதியில் ஒயரை சுற்றிக் கொண்டு மெயின் சுவிட்ச் பாக்சில் நேரடியாக ஒயரை இணைத்து மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,
அண்மையில் மோகன்ராஜ் கடும் மனஉளைச்சலில் இருந்ததாகவும், ப்ளுவேல் விளையாட்டில் ஈடுபட்டு, இதன் கட்டளைப்படி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டுருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினர்.
இது குறித்து மோகனூர் போலீசார், மோகன்ராஜின் மொபைல் போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!