• Sat. Apr 4th, 2026

வரவு செலவுத் திட்டம் போலியானது! ஜீ.எல்.பீரிஸ்

Byadmin

Nov 13, 2017 ,

வரவு செலவுத் திட்டம் போலியானது! ஜீ.எல்.பீரிஸ்

#GLPeiris #Anuradhapura #Meetings

இந்த வரவு செலவுத் திட்டம் போலியானது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் கூட்டு எதிர்க்கட்சியினால் நேற்று (12) நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் இன்று நினைத்துப் பார்க்க முடியாத ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளது. பியர் வகைகளுக்கு வரிச் சலுகை அளிப்பது குறித்த வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளாராம்.

அப்படியென்றால் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை ஏன் ஜனாதிபதி எதிர்க்கின்றார்.  இந்த வரவு செலவுத்திட்டம் முற்று முழுதாக ஓர் போலியானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *