பியருக்கான வரி குறைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி அதிருப்தி
#Maithripala #Rajitha #Champika
பியர் வகைகளுக்கான வரி குறைக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கேன்களில் அடைக்கப்பட்ட ஒரு லீற்றர் பியருக்கான வரி 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியும் சில அமைச்சர்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வரி குறைப்பு தொடர்பில் அமைச்சரவையில் கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரட்ன ஆகிய அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான பயன்பாட்டை தடுக்கவே இவ்வாறு வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த வாதத்தை அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.