• Sat. Oct 11th, 2025

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம்

Byadmin

Nov 16, 2017

ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம்… இந்த அவலநிலைக்கு என்ன காரணம்

பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர சென்றுள்ளார்.

அப்போது ரயில் நிலையத்தின் வாசலில் பெண் ஒருவர் அழுக்கு துணி அணிந்திருந்து பிச்சையெடுத்து கொண்டிருந்ததையும், மரத்தில் இருந்த பழங்களை பறித்து கொண்டிருந்ததையும் வித்யா பார்த்துள்ளார். அவரிடன் சென்று பேச முடிவெடுத்த வித்யா குடும்ப விபரங்கள் குறித்து கேட்டுள்ளார்.

பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், கணவர் மற்றும் மகனால் கைவிடப்பட்டவர் என வித்யாவுக்கு தெரியவந்தது.

மேலும் விசாரித்த போது, இவர் வடக்கு கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பொது பள்ளியில் குறித்த பெண் கணக்கு ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது.

பிச்சையெடுத்தவரின் பெயர் வல்சா என்பதை அறிந்த வித்யா அவரை புகைப்படம் எடுத்து அவர் நிலையை விளக்கி பேஸ்புக்கில் பதிவிட்டார்.

இதை பார்த்த வல்சா பணியாற்றிய பள்ளியின் மாணவர்கள் பலர் அவரை கவனித்து கொள்ள முன்வந்தனர். ஆனால், அவர்களுடன் போக மறுத்த வல்சா தனது கணவர் மற்றும் மகனுடன் மட்டுமே செல்வேன் என கூறிவிட்டார். தற்போது வல்சாவின் சகோதரி மற்றும் உறவினர்களும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட துணை ஆட்சியர் மூலம் வல்சா அங்கிருந்து மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் கணவர் மற்றும் மகனை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் குடும்பத்தினருடன் வல்சா இணைவார் என தான் நம்புவதாக வித்யா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *