வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல்…
2018ம் வருடத்திற்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று(17) முதல் ஆரம்பமாகிறது.
குறித்த விவாதமானது, எதிர்வரும் 19 தினங்களுக்கு இடம்பெற உள்ளதோடு, டிசம்பர் மாதம் 9ம் திகதி வரவு – செலவுத் திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
நேற்று(16) இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணி இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.
இதன்படி ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.