தேசிய கொடியை ஏற்றாத சர்வேஷ்வரனுக்கு எதிராக இராதாகிருஷ்ணன் போர்க்கொடி
தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவித்த வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஷ்வரனுக்கு எதிராக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்ற மறுப்பு தெரிவிப்பரானால், அந்த பதவிக்கு அவர் பொருத்தமானவர் இல்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இது பிழை என்று சுட்டிக்காட்டியதுடன், நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைவதுடன், தேசிய கொடிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவர் மறுப்பாரானால், அந்த பதவியில் தொடர்வதற்கு அவர் தகுதியானவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் எஸ். சர்வேஷ்வரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், குறித்த பாடசாலையின் அதிபரே தேசிய கொடியை ஏற்றியமை குறிப்பிடத்தக்கது.