ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்……
புதிதாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் மூவர் நேற்று (16) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
எம்.எச். மன்சில் கொழும்பு கிழக்கிற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயஷாந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மொறட்டுவை நகர மேயர் டீ.எம். சுஜித் புஷ்பகுமார ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ரத்கம தொகுதியின் இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட கீத் குணசேக்கரவும் அண்மையில் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
-ஜனாதிபதி ஊடகப்பிரிவு-