• Sun. Oct 12th, 2025

2016 ஆம் ஆண்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் பதிவு

Byadmin

Nov 21, 2017

2016 ஆம் ஆண்டில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் பதிவு

2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை 35,199 என்றும், இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 201 என்றும் ஆளும்கட்சியின் பிரதம கொரடாவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(21) உறுப்பினர் ஒருவர் வாய்மொழி மூலம் கேட்ட கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 35,966 எனவும் 2015 ஆம் ஆண்டில் 35,160 விபத்துக்களும் 2016 ஆம் ஆண்டில் இத்தொகை 35,199 என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

விபத்துக்களினால் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3233 எனவும், 2014 ஆம் ஆண்டு 2440 மற்றும்  2015 ஆம் ஆண்டு 2816 என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *