ரயில் கூரைகளில் பயணித்த பயணிகள் : இது இலங்கையில் (video)
ஹூணுபிடிய ரயில் குறுக்கு வீதியில் கொள்கலன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியமையால், ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று கொள்கலனுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தெமட்டகொடை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் மரமொன்று முறிந்து விழுந்தது. இதனால் களணிவௌி ரயில் பாதையிலும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து புகையிரத பாதைகளில் பாதிப்பு ஏற்பட்டதால் புகையிரத போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருந்ததுடன், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதன்காரணமாக ரயில் பயணிகள் புகையிரங்களின் கூரைக்கு மேலே ஏறி பயணம் செய்யக் கூடிய காட்சிகள் கெமராவில் பதிவாகியிருந்தது. அது தொடர்பான காணொளியை காணலாம்.
நன்றி – Ada Derana Tamil