மைலோவில் உள்ள சீனிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட ஜனாதிபதி கிந்தொட்டைக்கு கொடுக்கவில்லை !
கிந்தோட்டையை தாக்கியது அதிரடிப் படையினரும் பொலிசாரும்தான்என்று அந்த ஊர்மக்கள் நேரடியாக ஊடகங்களுக்குதெரிவித்துள்ளார்கள்,அப்படியென்றால் அரசாங்கம்தான் இதற்குபொறுப்பானவர்கள் என்பது உறுதியாகின்றது.இதனை நாட்டின் ஜனாதிபதிஇன்னும் கண்டிக்கவும் இல்லை, அனுதாபம் தெரிவிக்கவும் இல்லை.
அன்று அளுத்கமை பற்றி எரிந்தபோது அன்றய நாட்டின் பாதுகாப்புஅமைச்சராகவும், நாட்டை வழி நடத்தும் தலைவராகவும் இன்றய ஜனாதிபதிமைத்திரி அவர்கள்தான் இருந்திருந்தார்,அன்று அவர் அளுத்கமைபிரச்சினையை தடுப்பதற்கு எந்த ஏற்பாட்டையும் செய்யவும்இல்லை,அதேநேரம் அளுத்கமை சென்று பார்வையிடவும் இல்லை.
அன்று,இன்றய ஜனாதிபதி யாரென்று அறியப்படாத காரணத்தினால்அவருடைய செயல்பாடுகளின் உண்மைத்தண்மை யாருக்கும் பெரிதாகதெரியவில்லை, ஆனால் இன்று இவர் யாரென்பது நாட்டுக்கே தெரியும்.,
இந்த நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டஜனாதிபதி மைத்திரி கிந்தோட்டை பிரச்சினையை என்னவென்று கூடஅறியாதவர் போல இருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
அன்று அளுத்கமை பிரச்சினை நடந்து அடுத்த சில நாட்களுக்குள்ளாகவேநாடு திரும்பிய அன்றைய ஜனாதிபதி மஹிந்த அவர்கள் நேரடியாகஅளுத்கமை சென்று அந்த மக்களை சந்தித்து நடந்ததற்கு வருத்தம்தெரிவித்தது மட்டுமல்ல, உடனடியாக சீராக்கல் நடவடிக்கைகளையும்எடுத்திருந்தார்.
அதனைக்கூட முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக அவரைவிமர்சித்தது மட்டுமல்ல, மஹிந்த அவர்களுக்கு எதிராக வாக்களித்து அவரைவீட்டுக்கும் அனுப்பியிருந்தார்கள்.
ஆனால் இன்று நடந்துள்ள கிந்தோட்டை பிரச்சினைக்கு இன்றய நாட்டின்ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரி அவர்களை யாரும் குற்றம் கண்டதாகதெரியவில்லை,நமது அரசியல்வாதிகள்கூட இதனைஅலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. அப்படியென்றால் இதன் மர்மம்என்ன?
அன்று அளுத்கமை பிரச்சினை நடந்தது அரச படைகளால் அல்ல, மாறாகஇனவாத குழுக்களினால் என்பதென்று தெரிந்தும் அதனைத் தடுக்காதஅன்றய ஜனாதிபதி மஹிந்தவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தோம்.ஆனால் இன்று கிந்தோட்டையில் நடந்த கலவரத்துக்குமறைமுகமாகவும் பகிரங்கமாகவும் செயல்பட்டவர்கள் அரச படைகள்தான்என்று தெரிந்திருந்தும் அதற்கு பொறுப்பான இன்றய ஜனாதிபதிமைத்திரியை குற்றம்காண மறுப்பது ஏன் என்றுதான் புரியவில்லை.
ஆகவே,இதிலிருந்து மஹிந்தவின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகத்தான்அன்றய அளுத்கம பிரச்சினையை உண்டாக்கினார்கள் என்பதுதெளிவாகின்றது.அதற்கு நமது முஸ்லிம் கோடாரிக்காம்புகளும்துணைபுரிந்தார்கள் என்பது அதைவிட வேதனைக்குறிய விடயமாகும்.
அன்று அளுத்கமை பிரச்சினைக்காக கூக்குரலிட்ட நமதுகோடாரிக்காம்புகள் இன்று பெட்டிப்பாம்பாக அடங்கி கொண்டார்கள்.
உண்மையிலேயே தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக முஸ்லிம்களின்பொருளாதாரத்திலும் உயிர் உடமைகளிலும் விளையாடிய நமது கோடாரிக்காம்புகளை நிச்சயமாக இறைவன் தண்டிக்காமல் விடப்போவதில்லை,
ஆகவே முஸ்லிம் சமூகம் இதனைக் கருத்தில் கொள்ளாமல் இன்னும் இன்னும்இவர்களை நம்பி ஏமாந்தால் படைத்த இறைவனால்கூட எம்மை காப்பாற்றமுடியாமல் போகும் என்பதே எங்களின் கவலையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.