பொதுஜன பெரமுன கட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது
எதிர்வரும் ்உள்ளுராட்சி தேர்தலில் சட்ட சிக்கல்கள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சவை முன்னிறுத்தி செயற்படும் பொதுஜன பெரமுன கட்சி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கையை களுத்துறை செயலகத்தில் ஆரம்பித்துள்ளது.
கட்சியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.