வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. தேர்தல் நடைபெறும் 93 உள்ளுராட்சி மன்றங்கள் இவைதான்
93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுவை கோருவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த தடைக்கமைய 203 உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல் தடைபட்டுள்ளது.
ஏனைய 133 மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளபோதும், அவற்றில் 40 நிறுவனங்களில் நிலவும் சிறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவற்றின் தேர்தல்களும் பிற்போடப்பட்டுள்ளது.
இதனால் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
அதன்படி கொழும்பு, கம்பஹா,கண்டி, மாத்தளை, நுவரேலிய, காலி, மாத்தர, ஹம்பாந்தோட்டை உற்பட பல மாவட்டங்களில் உள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களின் விபரத்தை கீழே காணலாம்.