• Sat. Oct 11th, 2025

ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…!

Byadmin

Nov 28, 2017

ஜெயலலிதா மகள் அம்ருதா இல்லை – புகழேந்தி…!

ஜெயலலிதா மகள் என்று பெங்களூரு பெண் அம்ருதா கூறுவது பொய் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார். அம்ருதா என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

அவர் ஜெயலலிதாவின் மகள் கிடையாது. ஜெயலலிதாவை நாங்கள் மட்டும் அல்ல, கோடானகோடி தொண்டர்களும், பொதுமக்களும் அவரை அம்மா அம்மா என்று பாசத்தோடு அழைக்கிறார்கள்.

பல நலத்திட்ட உதவிகளை செய்து தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த அம்மா மீது களங்கம் ஏற்படுத்த அம்ருதா முயற்சிக்கிறார். அம்ருதா வழக்கில் எங்களையும் இணைத்துக் கொண்டு வாதாடுவோம். அவர் கூறியது பொய் என்பதை நிரூபிப்போம்.

இவரது தாயார் சைலஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது வீட்டுக்கு அடிக்கடி வந்து ஜெயலலிதா எனது சகோதரி என்று கூறி வந்தார். அவருடைய சகோதரி என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்டபோது உறவினர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுடன் எடுத்த ஒரு புகைப்படத்தையாவது ஆதாரமாக கொண்டு வாருங்கள் என்று கேட்டபோது அதுவும் இல்லை என்று கூறி விட்டார்.

அவர் இறந்த பிறகு அவரது மகள் அம்ருதா தற்போது ஜெயலலிதா எனது தாயார் என்று கூறி வருகிறார். இது ஒரு ஏமாற்று வேலை. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *