• Sat. Oct 11th, 2025

தாயிற்காக தெருவில் பிச்சை எடுத்த 7 வயது மகன்… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…!

Byadmin

Nov 28, 2017

தாயிற்காக தெருவில் பிச்சை எடுத்த 7 வயது மகன்… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…!

——————————————————————————————

இந்தியா, பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் மருத்துவமனையில் லலிதா தேவி (வயது 31) என்ற பெண் நவம்பவர் 14-ம் தேதி கடந்த வாரம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் முதலில் லலிதா தேவியின் மருத்துவ கட்டணமாக 1.5 லட்சம் கட்ட சொல்லி மருத்துவ நிர்வாகம் குடும்பத்தாரிடம் கூறியுள்ளது. அதனை தொடர்ந்து ரூ.75 ஆயிரம் ரூபாய் கட்ட சொல்லி கூறியுள்ளது.

ஆனால் லலிதா தேவியின் கணவர் நித்யான் ராம் ரூ. 25,000 மட்டுமே செலுத்தி உள்ளார். மீதி பணத்தை கட்ட சொல்லி மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

முழு பணத்தையும் கட்டிய பிறகு டிஸ்சார்ஜ் செய்யபடுவார் என கணவர் நித்யான் ராமிடம் மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் லலிதா தேவி மருத்துவமனையில் சிறைவைக்கப்பட்டார்.

இதனால் லலிதா தேவியின் 7 வயது மகன் தாயின் மருத்துவகட்டணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்துள்ளான். இந்த சம்பவம் உள்ளூர் தொலைகாட்சியில் வெளியானது.

இதனை பார்த்த மதேபுரா எம்.பி. பப்பு யாதவ் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த தாயையும் குழந்தையும் மீட்டார். மருத்துவமனைக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *