• Sat. Oct 11th, 2025

இலங்கையை சேர்ந்த 4 வயது சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தான்

Byadmin

Nov 28, 2017

இலங்கையை சேர்ந்த 4 வயது சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தான்

இலங்கையை சேர்ந்த நான்கு வயது சிறுவன், கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். உலகின் இளைய எழுத்தாளராக இலங்கையை சேர்ந்த சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். நான்கு வயதான தனுவன சேரசிங்க என்ற சிறுவனே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.  சீஷெல்ஸ் தீவில் வசிக்கும் இந்த சிறுவன் இலங்கை பூர்வீகத்தை கொண்டுள்ளார்.
உலகின் இளைய எழுத்தாளராக தனுவன பெயரிடும் போது அவரது வயது 4 ஆண்டுகள் 356 நாட்களாகும். வெறும் மூன்று நாட்களில் “Junk Food” என்ற ஆங்கில புத்தகத்தை தனுவன சேரசிங்க எழுதியுள்ளார்.
கற்பதில் திறமையானவர், மிகவும் வேகமாக புத்தகம் வாசிப்பவர் என தெரியவந்துள்ளது. பாலர் பாடசாலையில் சேரும் போதே 7 மொழிகளில் எழுத கூடியவராக காணப்பட்டுள்ளார். தற்போது அவர் சீஷெல்ஸ் விக்டோரியா சர்வதேச பாடசாலையில் 2ஆம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றார். இதற்கு முன்னர் 5 வயதுடைய பிரேசில் நாட்டு சிறுவன் ஒருவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *