கோட்டபய மீது நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்படுமா? நாளை தெரியும்
டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு இடமளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த உத்தரவு நாளை வௌியிடப்படவுள்ளது. கோட்டாபயவால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணையின் போதே, மேன் முறையீட்டு நீதிமன்றம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.